
தேன் படம் டிவியில் ஒளிபரப்பாகிறது
தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முதலில் தியேட்டரில் வெளியான இந்தப் படம் அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்போது முதன் முறையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. நாளை (ஞாயிறு) மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!