
தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா
இந்த நிலையில் அஞ்சனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்தது. பொதுவான சோர்வு என்று நினைத்தேன். ஆனால் காய்ச்சல் வந்தவுடன், இரண்டு சோதனைகள் செய்யப்பட்டன, அதன் முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்தது. அதன்பிறகான சோதனையில் பாசிட்டிவ் என வந்தது.
மக்கள் நம்புவது போல் இதை சமாளிப்பது எளிதானது அல்ல. தீவிரம் குறைந்திருக்கலாம், ஆனாலும், இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பாக இருங்கள். என்கிறார் அஞ்சனா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!