
பிக்பாஸ் தாமரைச் செல்வி குறித்து நெகிழ்ந்த ரசிகர்கள்!
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர் தாமரை. தற்போது அவரது குடும்பம் அண்ணன் பெரமையா சம்பாத்தியத்தில் ஓடி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தாங்காத வீடு, வீட்டில் ஆறு பேருக்கு மேல் தங்க வசதி கிடையாது. வீட்டிற்கு அருகே மாட்டுக்கொட்டடியின் அருகில் தான் சமையல் கட்டு. வீட்டில் டிவி கூட கிடையாது. தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிறகு தான் டிவியை சரி செய்துள்ளனர். அதில் தாமரைச் செல்வி சிரிப்பதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவரது தங்கை விஜயலெட்சுமி கூறுகையில், "நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோஷத்த பார்த்ததே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அக்கா சிரித்ததை பார்த்தேன்" என கூறியுள்ளார்.
அடிப்படை தேவையான பாத்ரூம் வசதி கூட இல்லாத வீட்டில் தான் தாமரைச் செல்வி பிறந்துள்ளார். இன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ள அவர், தனது வீட்டை எப்படியும் முன்னேற்றிவிட முடியும் என நம்பிக்கையுடன் உழைத்து வருகிறார். தாமரைச் செல்வியின் தங்கை விஜயலெட்சுமிக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசையாம். குடும்ப வருமை காரணமாக துணிக்கடைக்கு வேலைக்கு செல்ல நினைத்தவரை அண்ணன் பெரமையா படிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். அக்கா தாமரை செல்வியும் தனது தங்கை கலெக்டர் ஆக வேண்டும் என போராடி வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!