
ரோஷினி இப்படி ஒரு வாய்ப்பையா தவறவிட்டார்?
சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் "சார்பட்டா பரம்பரை" மற்றும் "ஜெய்பீம்". சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரமும், ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்த செங்கேனி கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றன. அதுவரை தமிழில் இவர்கள் படங்கள் நடித்திருந்தாலும் கூட, இந்த படங்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றன.
ஆனால், உண்மையில் இந்த இரண்டு வாய்ப்புகளும் நம் கண்ணம்மா ரோஷினிக்கு தான் முதலில் வந்துள்ளது. சீரியலில் கவனம் செலுத்தி நடித்தன் காரணமாக ரோஷினியால் இந்த இரண்டு வெற்றி படங்களிலும் நடிக்க முடியவில்லை. ஆனால், படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பின் மிகவும் வருந்தியுள்ளார். எனவே, தான் இனியும் வெள்ளித்திரை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என விடாமல் பிடித்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனால் தான் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி விலகியுள்ளார். இந்த தகவலை பிரபல விஜய் டிவி இயக்குனர் பிரவீன் பென்னட் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!