
சீரியல் நடிகை நேஹா கவுடாவின் காதல் கதை
இந்நிலையில் நேஹாவின் காதல் கதை தமிழ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கலர்ஸ் கன்னடா டிவியில் நடன போட்டியில் சாந்தனும் - நேஹா கவுடாவும் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நேஹா, "நானும் சாந்தனும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள், அவர் என்னிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலை சொல்லிவிட்டார். முதலில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவிலேயே இருவரும் காதலர்களாக மாறிவிட்டோம்" என கூறியுள்ளார். நேஹா - சாந்தன் ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. கன்னட தொலைக்காட்சிகளில் ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!