
புதிய சீரியலில் நாயகியாகும் வைஷ்ணவி
தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வைஷ்ணவிக்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் வெளியாகவுள்ள அந்த தொடரில் ராஜாமகள் புகழ் விஜய் ஹீரோவாகவும், வைஷ்ணவி அருள்மொழி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!