
ஜனனிக்கு இப்படி ஒரு தங்கையா?
விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ஜனனி அசோக்குமார். ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் டாப் ஹிட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஜனனி அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே வந்து விட்ட அவர், தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது முதன்முறையாக தனது சகோதரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜனனிக்கே டப் கொடுக்கும் அழகுடன் இருக்கும் அவரது தங்கையின் புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. நெட்டிசன்கள் ஒருபடி மேலே போய் ஜனனியின் தங்கை யார்? என சீரியஸாக தேடி வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!