
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் வனிதா
ஜன 27, 2022
Advertisement
பிக்பாஸ் அல்டிமேட் என்கிற ஓடிடி நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவர் பெயராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதல் போட்டியாளராக ஓவியா வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம், சிநேகன் மற்றும் ஜூலி போட்டியாளராக என்ட்ரி கொடுக்கும் தகவலை பிக்பாஸ் குழு புரோமோ வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் அடுத்த போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்கவுள்ள தகவலை மேலும் ஒரு புரோமோவின் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த புரோமோவில் கெத்தா கிளம்பும் வனிதா "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. சம்பவம் இனிமே தான் ஆரம்பம்" என கூறுகிறார். இந்த புரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சர்ச்சை நாயகி வனிதாவின் வருகை குறித்து தெரிந்து கொண்ட சின்னத்திரை ரசிகர்கள் "வனிதா வாந்தாச்சா... இனி டரியல் தான்" என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!