நல்ல போயிட்டிருந்த சீரியல திடீர்னு முடிச்சிட்டாங்க : நடிகர் கிருஷ்ணா பேட்டி
ஜூலை 04, 2023
Advertisement
‛சிதம்பர ரகசியம்", "தெய்வமகள்" போன்ற ஹிட் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. அண்மையில் நிறைவுபெற்ற தாலாட்டு தொடரிலும் நடிகை ஸ்ருதி ராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியோடு இந்த தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள நடிகர் கிருஷ்ணா, "நன்றாக ஓடிட்டு இருந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இது எங்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என தான் சொல்லியிருந்தனர். பல புது சீரியல்கள் வர இருப்பதால் தான் தாலாட்டு சீரியலை முடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணாவும், ஸ்ருதி ராஜும் சீக்கிரமே புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!