
காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா?
ஜூலை 27, 2024
தொலைக்காட்சி பிரபலமான தங்கதுரை தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டும் இந்த வேளையில் அடுத்ததாக அவர் செய்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. புது காரை வாங்கிய தங்கதுரை அந்த காரில் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் செல்லாமல் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று புதுத்துணி, உணவு வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார். தனது சுய சம்பாத்தியத்தில் ஏற்கனவே 3 ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் தங்கதுரை தற்போது ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் செய்துள்ள இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!