
மீண்டும் வில்லியாக களமிறங்கும் சுஷ்மா நாயர்
ஜன 21, 2022
Advertisement
"நாயகி" தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சுஷ்மா நாயர். சமீபத்தில் அவர் தனது காதலர் லிஜோ டி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு கேப் விட்டிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ள அவர், ஜீ தமிழின் "என்றென்றும் புன்னகை" தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் டிவியின் "செந்தூரப்பூவே" தொடர் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. அதில், வில்லி கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தாவும் அதன்பிறகு சந்தியா ராமசந்திரனும் நடித்து வந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகிவிட்டதால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் நடித்து வருகிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!