ஹிந்தியிலிருந்து டப்பிங்காகும் அமானுஷ்ய தொடர்
ஜன 09, 2024
Advertisement
கலர்ஸ் தமிழ் சேனலானது முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இணையாக புதிய தொடர்களை தயாரித்து வருகிறது. தவிரவும் ஹிந்தியில் ஹிட்டான சில சூப்பர் ஹிட் தொடர்களையும் மொழி பெயர்த்து வருகிறது. முன்னதாக "சங்கடம் தீர்க்கும் சனி பகவான்", "நாகினி" ஆகிய தொடர்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது "பிசாசினி" என்கிற புதிய அமானுஷ்ய திகில் தொடரை மொழிபெயர்த்து ஒளிபரப்ப உள்ளது.
தமிழ் சீரியல்களில் திகில், பேய் போன்ற சீரியல்களின் வரத்து குறைந்து விட்டதால், இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் புரோமோ அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!