
சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா
நவ 08, 2024
Advertisement
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீசன் 2 தொடர் விரைவிலேயே முடிவுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான அனு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது. சுந்தரி முதல் சீசனில் அனு என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நடித்து வந்தார். சீசன் 1 முடிவில் அனு கதாபாத்திரம் இறந்தது போல் காண்பிக்கப்பட்டது. அதேபோல் சீசன் 2விலும் அனு கதாபாத்திரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை. இந்நிலையில், அண்மையில் வெளியான புரோமோவில் அனு கதாபாத்திரம் மீண்டும் வருவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சுந்தரி சீரியலுக்கு தற்போதைக்கு எண்ட் கார்டு இல்லை என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!