வருங்கால கணவனுக்காக தியாகம் செய்த ஸ்ருதி சண்முகம்
மார் 22, 2022
Advertisement
"நாதஸ்வரம்" தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முகம் அறிமுகமானார். தொடர்ந்து "வாணி ராணி", "கல்யாண பரிசு", "பொன்னூஞ்சல்", "பாரதி கண்ணம்மா" ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இது இவரது முதல் போட்டியாகும்.
இந்த வெற்றி குறித்து பகிர்ந்துள்ள அர்விந்த், "இந்த வெற்றிக்காக இவள் (ஸ்ருதி சண்முகம்) முழு அளவில் தியாகம் செய்துள்ளார். நான் செய்ய வேண்டியதெல்லாம் முழுமையான அர்ப்பணிப்புடன் விட்டுக் கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே" என கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அழகான புரிதலுடன் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!