
கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள்
ஜூலை 05, 2022
Advertisement
ஜீ தமிழில் புதிய சீரியல்களை ஒளிபரப்ப துவங்கி உள்ளது. அதற்கான மார்க்கெடிங் பணிகளுக்காக பிரபல நடிகைகளை வைத்து "வாங்க பார்க்கலாம் - இது நம்ம டைம்" என புரோமோக்களையும் போஸ்டர்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் "அமுதாவும் அன்னலெட்சுமியும்" என்கிற தொடர் நேற்று ஜூலை 4 முதல் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஹீரோயின் கண்மணி மனோகரன் பச்சை நிற பாவடை தாவணியில் தேவதை போல் நிற்க, பழைய பேப்பர் ஸ்டைலில் "வாத்தியார் மாப்பிள்ளை தேவை!" என்ற தலைப்புடனும் "கட்டுனா வாத்தியாரதான் கட்டுவேன்" என்ற சப் டைட்டிலுடனும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்துவிட்டு குவியும் சிலர் "நானும் வாத்தியார் தான்" என கமெண்ட்களில் அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!