
சின்னத்திரையில் மீண்டும் சஞ்சீவ் வெங்கட்
மார் 11, 2023
Advertisement
நடிகர் சஞ்சீவ், சின்னத்திரையில் பல ஆண்டுகள் முன்னணி நடிகராக வலம் வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் 2002-ல் அறிமுகமான சஞ்சீவ் கடைசியாக 2018-ல் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் தொடக்கத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டாத சஞ்சீவ், ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் "கிழக்கு வாசல்" தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தொடரில் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி ஆகியோர் நடித்து வரும் நிலையில் சஞ்சீவின் என்ட்ரி தொடருக்கு மேலும் பாசிட்டிவாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!