
காதலில் முடிந்த அர்ச்சனாவின் விவாகரத்து : பெற்றோரை சேர்த்து வைத்த சாரா
இந்நிலையில், அண்மையில் அர்ச்சனா தன் மகளுடன் சேர்ந்து அளித்த பேட்டியில் தன் காதலை மீட்டெடுக்க சாரா உதவியதை கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த பேட்டியில் "ஒரு மாதத்திற்கு முன் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். அப்போது எங்கள் மகள் தான் இருவரையும் உட்கார வைத்து பேசினாள். நீங்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று கேட்டாள். அதன்பின் நாங்கள் எங்கள் தவறை உணர்ந்தோம். தற்போது மீண்டும் கடந்த 15 நாட்களாக 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தோமோ அப்படி காதலித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். வைரலாகும் இந்த பேட்டியை பார்க்கும் பலரும் பெற்றோரை மீண்டும் சேர்த்து வைத்த சாராவின் மெச்சூரிட்டியை பாராட்டி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!