
புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் சஹானா
ஜன 21, 2022
விஜய் டிவியின் "பகல் நிலவு" தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சஹானா. தொலைக்காட்சி தொகுப்பளினியாக சின்னத்திரையாக கேரியரை ஸ்டார் செய்த சஹானா, வெள்ளித்திரையில் பாலாவின் தாரைதப்பட்டை, விஜய் ஆண்டனியின் சலீம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது "தாலாட்டு", "கண்ணான கண்ணே" தொடரில் நடித்து வரும் அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "புதுப்புது அர்த்தங்கள்" தொடரில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடித்த எபிசோடுகள் தற்போது ஒளிபரப்ப தொடங்கியுள்ளன. ஆதிரா கதாபாத்திரம் ஒரு நெகடிவ் ரோல் என்பதால், சஹானா அந்த கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!