சத்தமின்றி திருமணத்தை முடித்த ரித்திகா
நவ 21, 2022
சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ்செல்வி குக் வித் கோமாளி உள்ளிட்ட சில விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது விஜய் டிவியின் "பாக்கியலெட்சுமி" ஹிட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்காக தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கூட்டமே காதல் ரோஜாவுடன் சமூகவலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ரித்திகாவோ அந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சைலண்டாக திருமணம் செய்துள்ளார்.
விஜய் டிவியில் தொடர்ந்து நடித்து வரும் ரித்திகா, அதே டிவியில் வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் நடைபெறும் எனவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரித்திகா - வினு ஆகியோரின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. திருமண கோலத்துடன் ரித்திகா வெளியிட்ட புகைப்படத்திற்கு குக் வித் கோமாளி புகழ், ஸ்ருதிகா அர்ஜூன், தர்ஷா குப்தா, சிவாங்கி உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!