
குக்வித் கோமாளியில் என்ட்ரியாகும் ரவீனா தாஹா
ஜன 18, 2023
Advertisement
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரவீனா தாஹா, ஜில்லா, புலி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் "மெளன ராகம் 2" தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். துள்ளலான நடனம், கவர்ச்சியான இன்ஸ்டா பதிவுகளால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான செலிபிரேட்டியாகவும் மாறிவிட்டார். மெளன ராகம் 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ரவீனா தாஹா தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4-ல் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீசனில் ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் களமிறங்குவதால் குக்வித் கோமாளியின் இந்த சீசனும் களைக்கட்டும் என ரசிகர்களும் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!