சின்னத்திரைக்கு திரும்பும் பிக்பாஸ் ராஜூ
மார் 09, 2022
Advertisement
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், "நாம் இருவர் நமக்கு இருவர் 2" தொடரில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ராஜூ, பிக்பாஸ் வாய்ப்பினால் சீரியலை விட்டு விலகினார். ஆனால், அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு இதுவரை வேறு நடிகரை தேர்வு செய்யவில்லை.
தற்போது கதையில் ஐஸ்வர்யா திருமணத்தில் ஏராளமான ட்விஸ்டுகள் வரப்போவதாகவும், இறந்து போனதாக காட்டப்பட்ட முத்துராசு மீண்டும் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டும் வகையில் தொடரில் பல திருப்பங்கள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முத்துராசு கதாபாத்திரத்துடன் கத்தியும் திரும்ப வருவார் என்றும் கத்தி கேரக்டரில் ராஜூ தான் தொடரப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!