
மீண்டும் சின்னத்திரையில் பெப்ஸி உமா : உற்சாகத்தில் ரசிகர்கள்
ஏப் 29, 2023
Advertisement
சின்னத்திரையில் 90-கள் காலக்கட்டத்தில் ஹீரோயினுக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தவர் பெப்ஸி உமா. கிட்டத்தட்ட 15 வருடங்களாக பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு சினிமா வாய்ப்புகள் கிடைத்தும் அதை வேண்டாமென்று மறுத்த உமா, சின்னத்திரையிலிருந்தும் பல வருடங்களுக்கு முன்பே விலகிவிட்டார். இந்நிலையில், தற்போது ஒரு விருது நிகழ்வில் தனது பழைய தோழர்களுடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய பெப்ஸி உமா தான் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். பெப்ஸி உமாவின் கம்பேக்கால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!