கணவரை தாத்தா என கிண்லடிக்கிறார்கள் : கண்கலங்கிய நீலிமா!
ஏப் 13, 2023
Advertisement
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிட்டு வருகிறார். எனவே, சமீபகாலங்களில் அதிகமாக நடிப்பதில்லை. திருமணத்திற்கு பின் தனது கணவரை எந்த அளவிற்கு நீலிமா காதலித்து வருகிறார் என அவரது சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா தனது கணவரை தாத்தா என்று சிலர் கிண்டலடிப்பதாக வருத்தப்பட்டுள்ளார். "என் கணவரின் புகைப்படத்தை பார்த்து எனக்கு அவர் அப்பாவா? தாத்தாவா? என்று கேட்கிறார்கள். என் கணவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தான். மற்றவர்களுக்காக அதை மறைத்து டை அடித்துக் கொண்டு திரிய வேண்டும் என அவர் நினைப்பதில்லை. நானும் அப்படி விரும்பவில்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ, அப்படி இருக்கிறார்" என்று கூறி கண்கலங்கியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!