
அபிராமி பேச்சில் ஆணவம் தெரிகிறது : டாக்டர் ஷர்மிளா
"கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் அதை பற்றி குற்றம் சொல்கின்றனர்" என அபிராமி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ஷர்மிளா, இதன் மூலம் கலாஷேத்ரா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானது. இதில் கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? என்பது போல் அபிராமி பேசியிருக்கிறார். அபிராமியின் இந்த பேச்சு அவரது ஆணவத்தை தான் காட்டுகிறது. மத்திய அரசு தரும் நிதியில் தான் கலாஷேத்ரா செயல்படுகிறது. எனவே, கேள்வி கேட்க்ககூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என ஷர்மிளா கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!