
நான் ரெடி : புதிய சீரியலுக்கு வாய்ப்பு தேடும் எதிர்நீச்சல் நடிகை
மார் 24, 2024
Advertisement
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யா தேவராஜன். சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர், அருவி தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தற்போது இவரது நடிப்புக்கு பாசிட்டிவான கமெண்டுகள் கிடைத்து வரும் நிலையில் புதிய ப்ராஜெக்ட்டுகளிலும் கமிட்டாகி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய ப்ராஜெக்ட்டுகளில் நடிக்க முடிவெடுத்துள்ளேன். நல்ல டீம் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்" என மெயில் ஐடி ஒன்றையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து சின்னத்திரையில் சத்யா தேவராஜனின் மார்க்கெட் எகிறும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!