
ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ், இந்த மாதம் ரிலீஸ்?
ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்த பின்பும் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அதில் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது என்கிறார்கள். மிக விரைவில் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மற்றொருபுறம் படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனால், இந்த மாத இறுதிக்குள் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.
தீவிர அரசியலில் இறங்கியதன் காரணமாக "ஜனநாயகன்" படம் தான் தனது கடைசி படம் என விஜய் எப்போதோ அறிவித்துவிட்டார். அதனால், இந்தப் படத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!