சின்னத்திரையில் கலக்கும் பாக்ஸிங் வீராங்கனை
மார் 21, 2022
Advertisement
தமிழில் "காட்டுப்பய சார் இந்த காளி", "தாயம்" உள்ளிட்ட சில படங்களின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐரா அகர்வால். அதன்பின் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது கலர்ஸ் தமிழின் மதுரை சிஸ்டர்ஸ் தொடரில் நாயகியாக நடித்து வரும் ஐரா, முன்னதாக கங்கா, கண்மணி, கடைக்குட்டி சிங்கம், ராஜா மகள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஐரா 2015ல் மிஸ் சவுத் இந்தியா பியூட்டி பேஜேன்ட் பட்டத்தை வென்றவர் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால், அதையும் தாண்டி ஐரா சர்வதேச அளவில் சாதனையும் படைத்துள்ளார். குத்துச்சண்டை வீராங்கனையான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அதோடு வெயிட் லிப்டிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!