
ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம்
ஏப் 27, 2024
Advertisement
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தது. இந்நிலையில் ஒருவருடம் கூட ஆகாத நிலையில் சண்டக்கோழி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதற்கு பதிலாக புதிய தொடருக்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக சின்னத்திரை வட்டாரங்களிலிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!