ஹிட் தொடர்களை தட்டித்தூக்கிய தொலைக்காட்சி
மே 10, 2022
Advertisement
தமிழ் சேனல்களை பொறுத்தமட்டில் சீரியல்கள் மற்றும் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனமும் முன்னணி சேனல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இரண்டு சீரியல்களை வாங்கி ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கலர்ஸ் தமிழ் சேனல் பக்கம் திருப்ப முடியும் என முடிவெடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட் அடித்த "கோலங்கள்" மற்றும் "தென்றல்" ஆகிய தொடர்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி வருகிற 16ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு கோலங்கள் சீரியலும், 2 மணிக்கு தென்றல் சீரியலும் ஒளிபரப்பாகவுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!