
கேப்ஷனில் கெத்து! சொல்லி அடித்த தர்ஷா குப்தா!
நடிகர் அசோக் குமார் நடிக்கும் புதிய படத்தில் தர்ஷா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தனது கேரியரில் அடுத்தடுத்த கட்டங்களில் தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் தர்ஷா குப்தா, சமீபத்தில் மீண்டும் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "உன் எதிரிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் உங்கள் மகிழ்ச்சி மிகவும் ஆபத்தான தண்டனை" என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தர்ஷாவின் ரசிகர்கள் அவருடைய புதிய ப்ராஜெக்ட்டுக்காக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தர்ஷா குப்தா, சின்னத்திரையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கான அடையாளத்தை மேலும் அதிகரித்த நிகழ்ச்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!