
பிரபல சேனலின் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோ மீது புகார்!
இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சி சார்பில், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதத்தில், "நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த பகுதியில் நடித்திருந்த சிறுவர்களுக்கு அந்த காட்சியின் தன்மையையோ அல்லது உண்மை நிலையையோ அறிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்கள் குழந்தைகள். ஆனால், காமெடி என்ற பெயரில் குழந்தைகள் மீது அந்த கான்செப்ட் திணிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி முழுவதிலுமே நடுவர்களும், தொகுப்பாளர்களும் சிறுவர்களின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இது, அந்த சேனலை பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தவறான கண்ணோட்டத்தை தேசிய அளவில் உருவாக்குகிறது.
எனவே, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடுவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!