
புதிய சித்தி யார்? குழப்பம் நீடிப்பு
இந்த நிலையில் தான் அவர் சித்தி சீரியலின் 2ம் பாகத்தை துவக்கினார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ராதிகா அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். அவரது கணவர் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
இதனால் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டார். ஏற்கெனவே ராதிகா நடித்து முடித்துள்ள எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா நடித்த கேரக்டரில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராதிகா சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சேனல் தரப்பு சில நடிகைகளை குறிப்பிடுகிறது. இதனால் இதுவரை அடுத்த சித்தி பற்றி எந்த முடிவும் ஏற்படவில்லை.
ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!