
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் : சிவன் சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்வு
ஜூலை 13, 2022
Advertisement
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2022- 2024ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. இதில் மூன்று அணிகள் போட்டியிட்டன. தற்போதைய தலைவர் ரவிவர்மா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஓர் அணியும், புதிதாக ஆதித்யா தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டன. இதில் சிவன் சீனிவாசன் வெற்றி பெற்று தலைவர் ஆனார். அவர் மூன்றாவது முறையாக தலைவராக வெற்றி பெற்றுள்ளார். செயலாளராக போஸ் வெங்கட், பொருளாளராக ஜெயந்த் ஆகியோரும் வெற்றி பெற்றார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!