நீண்ட இடைவேளைக்கு பின் ரீ என்ட்ரி தரும் பாம்பே ஞானம்
பிப் 03, 2022
Advertisement
90"ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களின் ரசிகர்களால் பாம்பே ஞானத்தை மறக்கவே முடியாது. இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும்பாலும் பெண் ஆளுமையை பறைசாற்றும் கதாபாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து வந்த பாம்பே ஞானம், பிரபல நாடக மேடை கலைஞராவார். சில காலங்களாக திரையுலகை விட்டு விலகியிருந்த பாம்பே ஞானம் தற்போது புதிய சீரியலான "எதிர்நீச்சல்" தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் ஆளுமையுடன் வலம் வந்த பாம்பே ஞானம் 1989ம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கி, நாடகங்களை இயக்கி வந்தார். கலைத்துறையில் பாம்பே ஞானத்தின் பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு கடந்த 2005 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!