
இனி நடிப்பே வேண்டாம் : கும்பிடு போட்டு விலகிய புலி ராகவேந்திரன்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். முன்னேற்றம் இல்லாமல் இன்றும் ஆரம்பித்த இடத்திலேயே தான் நிற்கிறேன். எனக்கு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதுவும் சில காலங்களில் நீக்கப்பட்டு விடுகிறது. யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்கின்றனர். நானும் யாருக்கும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை.
மாறன் கதாபாத்திரம் வேறு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இனி அதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி என்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். எனக்கும் பொருளாதார ரீதியாக கஷ்டம் இருக்கிறது. இனிமேலும் நடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் எதுவுமே பண்ண முடியாது. நான் சீரியலை விட்டு விலகுகிறேன்" என உருக்கமாக பேசியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!