
பிக்பாஸில் குரூரமா இருக்காங்க: பவா செல்லத்துரை ஓப்பன் டாக்
அக் 10, 2023
Advertisement
பிக்பாஸ் சீசன் 7-ல் பிரபல எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லத்துரை என்ட்ரி கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரும் பிக்பாஸ் வீட்டில் வரிசையாக கதைகள் சொல்லி அசத்தி வந்தார். அவர் மீது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி புகார் ஒன்றை வைத்தார். சக ஹவுஸ்மேட்டுகளும் அவரை சோம்பேறி என்று கூட கிண்டல் செய்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள பவா செல்லத்துரை, "இந்த வீட்டுக்கு வரும் போது சூழ்ச்சிகள் சதிகள் இருக்கும் என்று மட்டும் தான் நினைத்தேன். ஆனால், இங்கு அதிகமாக வன்மம் தான் இருக்கிறது. இங்கிருக்கும் டாஸ்க்குகளை செய்யவும் என் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்" என்று கூறி வெளியேறிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பவா செல்லத்துரை மீண்டும் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தங்கள் விருப்பத்தை சோஷியல் மீடியா மூலமாக பிக்பாஸிடம் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!