கேப்ரில்லாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அவினாஷ்! என்ன காரணம் தெரியுமா?
Advertisement
Advertisement
கேப்ரில்லாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அவினாஷ்! என்ன காரணம் தெரியுமா?
ஜூலை 10, 2022
அ நிறம் | அளவு
Advertisement
சுந்தரி சீரியலின் பிரபலங்களான கேப்ரில்லா செல்லஸ், அவினாஷ் மற்றும் ஜிஸ்னுமேனன் ஆகியோர் என பலரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். அதில், ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கேப்ரில்லாவும் அவினாஷூம் சேர்ந்து நடனமாடினர். அப்போது ஆடிக்கொண்டிருந்த அவினாஷ் நடன வேகத்தில் கேப்ரில்லாவின் காலில் ஓங்கி மிதித்துவிட்டார். இதனால் கேபி வலியால் துடித்து நிற்கிறார். இதை கவனித்த அவினாஷ் உடனடியாக கேப்ரில்லாவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்பது போல் செய்கிறார். சக நடிகையிடம் எந்த ஈகோவும் காட்டாமல் அவினாஷ் செய்த இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது நல்ல குணத்தை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!