
புல்லட்டில் கெத்தாக போஸ் கொடுத்த அர்ச்சனா குமார்
ஜூலை 12, 2024
Advertisement
சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா குமார் பொன் மகள் வந்தாள், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதையும் தவிர நடன திறமையுள்ள அர்ச்சனா ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா குமார் தற்போது புல்லட் ஒன்றில் அமர்ந்து கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சரண்யா துராடி பிஎம்டபுள்யூ பைக்கும், ரச்சிதா மஹாலெட்சுமி ராயல் என்ஃபீல்ட் மீடியர் என்கிற பைக்கும் வாங்கி ரோட் ட்ரிப் செல்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா குமாரும் புல்லட் வாங்கிவிட்டாரா? என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!