
பைக் ஓட்டும் ஆல்யா... பயத்தில் சரவணன்
செப் 30, 2021
Advertisement
ராஜா ராணி 2 சீரியலுக்காக ஆல்யா மானசா பைக் ஓட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் சித்துவும் ஆல்யாவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாயகியான ஆல்யா தனது இண்ஸ்டாகிராமில் ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் சீரியலின் ஒரு காட்சியாக ஆல்யா பைக் ஓட்டிச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கே நடக்கும் கலாட்டாக்களையும், சித்து பின்னால் உட்கார்ந்து பயப்படுவதையும் வீடியோவாக ரெக்கார்ட் செய்து ஆல்யா தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!