
கவர்ச்சியான கடற்கன்னியாக நீருக்கடியில் போஸ் கொடுத்த ரீமா
விஜய் டிவியில் சின்னத்தம்பி மற்றும் டான்ஸ் ஷோக்களில் பங்கற்று புகழ் பெற்றவர் நடிகை ரீமா அசோக். சமீபத்தில் சின்னத்திரை தொடரில் ரீ என்ட்ரி கொடுப்பதாக அறிவித்திருந்தார். தற்போது மாஸ்டர் தி பிளாஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ரீ என்ட்ரி குறித்து அறிவித்த நாள் முதலே இன்ஸ்டாவில் ஆக்டிவான ரீமா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் நீச்சல் குளத்தில் நீருக்கடியில் மூழ்கி ஹாட்டான போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரீமா, "கடலுக்கடியில் ஆயிரம் மீன்கள் இருக்கலாம். ஆனால் நான் கடற்கன்னி" என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இவரது தோழியும் சக நடிகையுமான பரீனா இதே போல் நீருக்கடியில் போட்டோஷூட் நடத்தியிருந்த நிலையில் தற்போது ரீமாவும் அதே போன்றதொரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!