
அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
பிப் 18, 2023
சூப்பர் சிங்கர் பிரபலமான அஜய் கிருஷ்ணா, தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பலகட்ட போராட்டங்களுக்கு பின் கரம்பிடித்தார். அண்மையில் தனது பிறந்தநாளன்று மனைவி கர்ப்பமாக இருக்கும் இனிய செய்தியை சொல்லியிருந்தார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதியன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை இப்போது தெரியப்படுத்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அஜய் கிருஷ்ணா. இதனையடுத்து மானசி, லக்ஷ்மி பிரதீப் என பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!