
எதிர்நீச்சலில் நடிப்பது சவாலாக இருக்கிறது : வேல ராமமூர்த்தி
ஏப் 06, 2024
Advertisement
எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக காலமானதையடுத்து தற்போது எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் மாரிமுத்து குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "மாரிமுத்து அற்புதமான கலைஞர். என்னை விட 17 வயது குறைவானவர். சூட்டிங் செல்லும் இடத்தில் எல்லாம் அவரிடம் நிறைய மக்கள் செல்பி எடுத்துக் கொள்வார்கள். இதை கொஞ்சம் பில்டப் என்று தான் நினைத்தேன். அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!