
ஆடிஷன்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்; மனம் திறக்கும் அபி நவ்யா
ஜன 19, 2022
Advertisement
பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானவர் அபி நவ்யா. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், சின்னத்திரையில் நடிப்பதற்காக பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், "சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய காலங்களில் 250க்கு மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். பெரும்பாலான இடங்களில் ஓப்பனாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கேட்டனர். சினிமாவில் மட்டுமல்ல சீரியலில் நடிப்பதும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் பெண்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சினிமாவில் இன்னும் மீ டூ புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.
அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!