
குக் வித் கோமாளி சீசன் 3: 22ம் தேதி முதல் ஒளிபரப்பு
இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய ரோஷினி, நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, பாடகர் அந்தோணி தாசன், நடிகை வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்குகிறார்கள். வருகிற 22ம் தேதி துவங்கி வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!