
நடிகைகள் பூஜிதா, பீனாவுக்கு கொரோனா
பூஜிதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களின் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனித்திருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்"" என்று கூறியிருக்கிறார்.
இதேபோன்று மலையாள நடிகை பீனா அந்தோணிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 35 வருடங்களாக நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர நடிகையாக நடித்துள்ளார். தற்போது மலையாள சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!