
அக்குவாரியம் படத்தை வெளியிட கோர்ட் தடை
தற்போது கொரோனா காலம் என்பதாலும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் தேவை இல்லை என்பதாலும் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு தடைகேட்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஜெஸ்ஸி மணி என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த படம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை அவதூறாக சித்தரிக்கிறது. அவர்களின் பாலியல் பிரச்சினைகள் பற்றி தவறாக பேசுகிறது. 2013ம் ஆண்டு பிதாவினம் புத்ரானம் பரிசுத்தாதம்வினம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என்ற பெயரில் தயாராகி தணிக்கை சான்று மறுக்கப்பட்ட படம். தற்போது அக்குவாரியம் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தற்காலிக தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!