
மோகன்லாலுக்கே தெரியாத அவரது செல்லப்பெயரை கூறிய மனைவி
இது பற்றி அவர் கூறும்போது, “மோகன்லால் நடித்த முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்திலிருந்து அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் தான் அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் தினசரி ஐந்து போஸ்ட் கார்டுகள் அவருக்கு தொடர்ந்து என் பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வந்தேன். ஒரு கட்டத்தில் அது நான்தான் என அவர் கண்டுபிடித்து விட்டார். எனக்கு திருமணம் என்கிற பேச்சு வந்தபோது மோகன்லாலை நான் விரும்புவதாக வீட்டாரிடம் கூறினேன். என் தந்தை தனது நெருங்கிய நட்பில் இருந்த நடிகை சுகுமாரி மூலமாக இந்த விஷயத்தை மோகன்லாலிடம் தெரிவித்து அதை வெற்றிகரமாக எங்களது திருமணத்தில் முடித்து வைத்தார். வீட்டைப் பொறுத்தவரை அவரை சுந்தர குட்டப்பன் (அழகான பையன்) என்றுதான் செல்லமாக குறிப்பிடுவார்கள். இது அவருக்கே தெரியுமா என்று கூட எனக்கு தெரியாது,"" எனக் கூறியுள்ளார் சுசித்ரா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!