
ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ்
இவர் இயக்கும் பெரும்பாலான படங்களில் அனுஷ்கா நடிப்பார். இருவரும் நெருக்கமான நண்பர்கள். தற்போது அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "காட்டி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அதிரடி திரில்லர் படமாக உருவாகிறது.
கிரிஷ் ஏற்கனவே ரம்யா என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். தற்போது பிரீத்தி சல்லா என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!