
போராட்டத்தை வாபஸ் பெற கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு
அதனால் இந்த போராட்டம் எப்போது முடியும் என தெரியாததால் ஒரு சில படங்கள் பிப்ரவரி 22ம் தேதியே வெளியாகின. அப்படி வெளியான படம் தான் தற்போது சூப்பர் ஹிட்டாக மாறி உள்ள "மஞ்சும்மேல் பாய்ஸ்". இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, அதிலும் குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் வெளியான படங்கள் வாரத்திற்கு ஒன்றாக ஹிட் அடித்து ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வர செய்துள்ளன.
இதனை கவனித்த கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகளை நோக்கி வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் போராட்டத்தை அறிவித்து வசூல் ரீதியான பின்னடைவை சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதனால் வரும் வெள்ளியில் இருந்து வழக்கம் போல படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!