
ஒரே பெயரில் டைட்டிலும் கேரக்டரும் : கவுதம் மேனன் மகிழ்ச்சி
லியோ படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் பஷூக்கா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கவுதம் மேனன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கவுதம் மேனனின் கேரக்டர் போஸ்டரை பஷூக்கா படக்குழு வெளியிட்டனர். இந்த படத்தில் அவரது கதாபாத்திர பெயர் பெஞ்சமின் ஜோஸ்வா. அந்த வகையில் கவுதம் மேனனின் ஜோஸ்வா பட டைட்டிலும், பஷூக்கா படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!